புதுடெல்லி,
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் இளம் பெண் ஒருவர் பலியாகினார். 14 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்புக்கு பாரத பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோழைத்தனமாக இத்தகையை தாக்குதலை நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 comments
Readers Comments