twitter facebook rss

,

மத்திய அரசு விரும்பினால் என்னை நீக்கலாம். ஆனால் நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கிதான் முடிவு செய்யும்: ரகுராம் ராஜன்


மத்திய அரசு விரும்பினால் என்னை நீக்கலாம். ஆனால் நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கிதான் முடிவு செய்யும்: ரகுராம் ராஜன் 


புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இன்று ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் குறித்து பேசுகையில், ''நான் தான் நிதிக்கொள்கையை பற்றி முடிவு  செய்கிறேன். நான்தான் அது என்ன என்பதையும் சொல்கிறேன். மத்திய அரசு வேண்டுமானால் என்னை நீக்கம் செய்யலாம். ஆனால் அரசாங்கத்தால் நிதிக்கொள்கையை நிர்ணயிக்க முடியாது. அந்த வகையில் எனக்கு சுதந்திரம் உள்ளது. அரசாங்கத்துடன் மகிழ்ச்சியோடு பேசுகிறேன், அவர்களின் ஆலோசனைகளையும் கேட்கிறேன். ஆனால் இறுதியாக வட்டி விகிதம் என்பது என்னால்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ரிசர்வ் வங்கிதான் நிதிக்கொள்கையை கட்டுப்படுத்தும். இந்தியாவை பொறுத்தவரையில், ரிசர்வ் வங்கி ஏதாவது பெரியதாக செய்ய வேண்டும் என்றால் அதை மத்திய அரசிடம் சென்று எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கிக்கு அரசு ஆதரவாக இருப்பதும், கலந்து ஆலோசனை செய்வதும் வழக்கமான ஒன்றுதான்.'' என்றார்.
மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரிசர்வ் வங்கி கவர்னர் மாற்றப்பட்டு விடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அதை தெளிவுபடுத்தும் விதமாக ரகுராம் ராஜன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
ரகுராம் ராஜன் கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழரான இவர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக பதவி வகித்தவர். 2008-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதை முன்கூட்டியே சரியாக கணித்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 comments

Readers Comments

You can find 10 th result Accounting, Anna university news, Bank exam study materials, Bank jobs, Biotechnology, Campus interview Tips, Daily GK Updates, Diploma Result, English study materials, Experince job, Fresher jobs, Government jobs, jobs in Dubai, jobs in gujarat, Jobs in Hyderabad, jobs in kolkata, jobs in mumbai, jobs in noida, jobs in Pune, latest news, Mobile tricks, Off-campus, SSC recruitment, TNPSC Group 2 Question Papers, Walk in in this blog.

Contact Form

Name

Email *

Message *

Latest Posts