சென்னை,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 3/4 லட்சம் மாணவ&மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.
பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவபடிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் நர்சிங், பிஸியோ தெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்புகள், கால்நடை மருத்துவப்படிப்புகள், கலை அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட எந்த படிப்புகளிலும் சேர முடியும். எனவே எப்போது பிளஸ்-2 தேர்வு முடிவு வரும் என்று பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் காத்திருக்கிறார்கள்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், 1193 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்1192 மதிப்பெண் பெற்று தருமபுரி மாணவி அலமேலு மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 1191 மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்
ஒட்டு,மொத்தமாக 90.6 சதவீதம் மாணவர்க்ள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கணிதத்தில் 3,382 பேரும் இயற்பியலில் 2,710 பேரும் வேதியலில் 1,693 பேரும், வணிகவியலில் 2,551 பேரும், கம்யூட்டர் சயின்ஸ் -993 பேரும், அக்கவுண்டன்சி 2,403 பேரும் நுற்றுக்கு நூறுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் 200 க்கு 198 மதிப்பெண்கள் பெற்று சுஷாந்தி முதலிடம் பெற்றுள்ளார்.
0 comments
Readers Comments