
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆயிரத்து 552 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 462 பேர் எழுதினார்கள். இவர்களில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 462 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 8 ஆயிரத்து 414 பேர் மாணவிகள். இவர்கள் தவிர தனித்தேர்வர்கள் 74 ஆயிரத்து 647 பேர்கள். இவர்கள் தவிர சென்னை புழல் சிறை, திருச்சி மத்திய சிறை ஆகியவற்றிலும் உள்ள சிறைவாசிகள் 119 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். மொத்தத்தில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 பேர் எழுதினார்கள்.
11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இதில் 18 பேர் பெண்கள். தர்மபுரி மாவட்டம் அக்ஷயா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பகிரா பானு உள்பட 19 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை 125 பேர் பிடித்துள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று 321 மாணவர்கள் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர்.
0 comments
Readers Comments