latest news,
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலி; 14 பேர் காயம், பலத்த பாதுகாப்பு
Posted by careerblog1
Published on
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலி; 14 பேர் காயம், பலத்த பாதுகாப்பு
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை குண்டு வெடித்ததில் ஒருவர் பலியாகினார்.
பாகிஸ்தான் உளவாளி
சென்னை நகருக்கு ஏற்கனவே தீவிரவாத எச்சரிக்கை இருந்த நிலையில் சென்னையில் பாகிஸ்தான் நாட்டின் பயங்கர உளவாளி முகமது ஜாகீர்உசேன் நேற்று கைது செய்யப்பட்டான். ஜாகீர்உசேன் கொடுத்த வாக்குமூலத்தில் அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகங்களை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக அவர் பரபரப்பு தகவல் தெரிவித்தார். இலங்கையில் கொழும்பு நகரத்தில் செயல்படும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகள் இருவர் என்னோடு நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை படம் பிடித்து இ–மெயில் வாயிலாக, நான் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன். அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்று, அங்குள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரக அலுவகத்தை படம் பிடித்து அனுப்ப திட்டமிட்டு இருந்தேன். நான் சென்னையில் தங்கி இருக்க தேவையான செலவுக்கு, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பணம் கொடுத்தனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை தளம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை புகைப்படங்களுடன் எடுத்து அனுப்பவும், எனக்கு ஆணை பிறப்பித்து உள்ளனர். எனக்கு 2 செயற்கை கோள் செல்போன்களும் கொடுத்து அனுப்பினார்கள். அதன்மூலம் நான், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளோடு பேசி இருக்கிறேன். இவ்வாறு, உளவாளி ஜாகீர்உசேன், போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.
கவுகாத்தி எக்ஸ்பிரஸ்
தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவ தொடங்கி இருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத் தில் குண்டுகள் வெடித்தன. கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. கவுகாத்தி ரெயில் பெங்களூரில் புறப்பட்டு சென்னை வழியாக அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு செல்லும் ரெயிலாகும். பெங்களுரில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு அதி காலை 5.40 மணிக்கு வந்துசேரும். இங்கு பயணிகளை இறக்கி ஏற்றிவிட்டு பின்னர் கவுகாத்தி செல்லும்.
குண்டுகள் வெடித்தன
இன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 7.05 மணிக்குத்தான் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது பயணிகள் அவசரம், அவசர மாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். இந்நிலையில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்-4 பெட்டியில் 70-ம் எண் இருக்கை பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த வினாடியே அருகில் உள்ள எஸ்-05 முன்பதிவு பட்டியில் உள்ள இருக்கை எண் 30லும் பயங்கர சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்தது.
இளம்பெண் பலி
குண்டு வெடித்ததை அடுத்து ரெயிலின் எஸ்-4, எஸ்-5 இரு பெட்டிகளிலும் ஒரு பகுதி நொறுங்கியது. இருக்கைகள், கண்ணாடிகள் சிதறின. இதில் சிக்கிக் கொண்ட பயணிகள் அலறினார்கள். குண்டுகள் வெடிக்கின்றன என்ற தகவல் பரவியதும் பயணிகள் அலறியடித்தப்படி ரெயிலில் இருந்து இறங்கினார்கள்.
இதற்கிடையே குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ் 4 பெட்டிக்குள் ஒரு இளம்பெண் குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி இருப்பது தெரிந்தது. அவர் 22வயது இளம்பெண் சுவாதி என தெரியவந்தது. உடலை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுவாதி ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
14 பேருக்கு சிகிச்சை
குண்டு வெடிப்பில் 14 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ட்டு வருகிறது. இரண்டு பேரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் சோதனை செய்தனர்.
ரெயில் சேவை நிறுத்தம்
சென்ட்ரலில் இருந்து மற்ற நகரங்களுக்கு புறப்பட்டு செல்லும் ரெயில் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்களின் பெட்டிகளிலும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி வந்த மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவற்றிலும் குண்டுகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 9.30 மணிக்குப் பிறகு ரெயில் சேவை தொடங்க ஆரம்பித்தது. குண்டு வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளை மட்டும் விட்டு, விட்டு 10:20 மணிக்கு புறப்பட்டு சென்றது.
அதிகாரிகள் ஆய்வு
குண்டு வெடிப்புகள் பற்றி தகவல் அறிந்ததும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். தமிழக டி.ஜி.பி. ராமானுஜம், மாநகர கமிஷனர் திரிபாதி, ரெயில்வே ஐ.ஜி. சீமா அகர்வால் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தார். குண்டு வெடிப்பு பற்றி ரெயில்வே போலீசார் விசாரித்தனர்.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
இந்நிலையில் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கிய தகவல் கிடைத்துள்ளதாகவும், விசாரணை ரெயில்வே போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி. ராமானுஜம் தெரிவித்தார்.
பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை
எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்ததை அடுத்து ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரலில் குண்டு வெடித்ததை அடுத்து எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சென்னையில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து மதுரை, கோவை, சேலம், திருவள்ளூர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கியமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மர்மநபர் கைது
இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் இரண்டு மணி நேரமாக ரெயிலில் பதுங்கியிருந்த நபரிம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட நபர் குண்டு வெடிப்பு நடந்த பெட்டிக்கு அருகே இருந்த பெட்டிக்குள் பதுங்கியிருந்துள்ளார்.
வைத்தது யார்?
கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்தது யார்? என்று தெரியவில்லை. எந்த தீவிரவாத இயக்கமும் இதற்கு பொறுப்பு ஏற்க வில்லை.
சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் இந்த குண்டு வெடிப்புகளை நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீரவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் இந்த குண்டு வெடிப்புகளை நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீரவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
You can find 10 th result Accounting, Anna university news, Bank exam study materials, Bank jobs, Biotechnology, Campus interview Tips, Daily GK Updates, Diploma Result, English study materials, Experince job, Fresher jobs, Government jobs, jobs in Dubai, jobs in gujarat, Jobs in Hyderabad, jobs in kolkata, jobs in mumbai, jobs in noida, jobs in Pune, latest news, Mobile tricks, Off-campus, SSC recruitment, TNPSC Group 2 Question Papers, Walk in in this blog.
10 th result
10th time table
12 th result
12th exam timetable
abroad jobs
Accounting
Anna university news
Anna university Results
Aptitute study materials
Bank exam study materials
Bank jobs
Biotechnology
Campus interview Tips
Cricket Live
Daily GK Updates
Diploma Result
English study materials
Experince job
Fresher jobs
Government jobs
HR Interview Tips
IBPS
Information Technology Career Pages of Various Companies
intern
job
Jobs in Bangalore
jobs in chennai
jobs in Delhi
jobs in Dubai
jobs in gujarat
jobs in gurgaon
Jobs in Hyderabad
jobs in kolkata
jobs in mumbai
jobs in noida
jobs in Pune
latest news
Mobile tricks
Off-campus
PC tricks
Reasoning study materials
RRC group d answer key 2014
SSC recruitment
SSC study materials
Study materials
Techincal interview
TNPSC Group 2 Question Papers
Walk in
0 comments
Readers Comments