சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆயிரத்து 552 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 462 பேர் எழுதினார்கள். 11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இதில் 18 பேர் பெண்கள். தர்மபுரி மாவட்டம் அக்ஷயா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பகிரா பானு உள்பட 19 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். பகிரா பானு பத்தமடையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஆவார். அவர் தனது ஆசிரியர்கள், உடன் படித்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை 125 பேர் பிடித்துள்ளனர். இதில் 101 பேர் மாணவிகள் ஆவார். 497 மதிப்பெண்கள் பெற்று 321 மாணவர்கள் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர். 75 பேர் மாணவர்கள் ஆவார்.
ஆங்கிலத்தில் 677 பேர் 100க்கு 100 மார்க் வாங்கியுள்ளனர். கணிதத்தில் 18682 பேர் 100க்கு 100 மார்க் வாங்கியுள்ளனர். அறிவியலில் 69560 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 26554 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 90.7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
0 comments
Readers Comments