பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்கா சுட்டுத் தள்ளிவிட்டதாக இணையதளங்களில் ஒரு செய்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக கூறப்பட்டதாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆக விமானத்திற்கு உண்மையில் என்ன ஆனது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் இணையதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.
மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்கா சுட்டுத்தள்ளிவிட்டு அதை மறைப்பதாக ஜான் சக்மேன் என்ற முன்னாள் எண்ணெய் நிறுவன ஊழியர் மற்றும் எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.
மலேசிய விமானத்தை அமெரிக்கா எதேச்சையாக அல்லது வேண்டும் என்றே சுட்டிருக்கலாம். தற்போது அதை ரகசியமாக வைக்க முயற்சி செய்யலாம் அல்லவா என்று சக்மேன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலுக்கு அடியில் உள்ள மலைகளின் இடுக்கில் இருந்து விமான பாகங்களை மீட்பது மிகவும் கடினம் என்பதால் தங்கள் செயல் வெளியே தெரியாது என்று அமெரிக்கா தைரியமாக உள்ளது என்றார் சக்மேன்.
முன்னதாக அமெரிக்க ஈரான்-ஈராக் போரின்போது ஈரான் ஏர் பிளைட் 655ஐ சுட்டுத் தள்ளியதில் அதில் இருந்த 290 பேர் பலியாகினர். ஆனால் அதை அமெரிக்கா ஒப்புக்கொள்ளவே இல்லை. அடுத்ததாக பான் ஆம் பிளைட் 103ஜை தாக்கியதில் 259 பயணிகள் மற்றும் தரையில் இருந்த 11 பேர் பலியாகினர். மூன்றாவதாக அமெரிக்க ராணுவ ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதில் அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் டிடபுள்யூஏ பிளைட் 800 தாக்கப்பட்டது என்று சக்மேன் தெரிவித்துள்ளார்.
மலேசிய விமானம் பாதையை மாற்றிச் சென்றிருந்தாலும் அமெரிக்க ராணுவ உளவுப் பிரிவின் கண்களில் இருந்து தப்புவது கடினம். ஏனென்றால் விமானம் பாதையை மாற்றி அமெரிக்கா அதிரகசியமாக வைத்துள்ள ராணுவ தளமான டீகோ கார்சியா நோக்கி சென்றுள்ளது. இந்த செய்தி தான் தற்போது இணையதளங்களில் பரபரப்பாக படிக்கப்படுகிறது.
0 comments
Readers Comments